பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவை இணையதளவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சிக்கிய அமிதாப்
சினிமா பிரபலங்கள் சாதாரணமாக செய்யும் சில விஷயங்கள்கூட சில சமயங்களில் சர்ச்சையில் சென்று முடியும். அந்த வகையில் சமீபத்தில் அமிதாப் பச்சன் ஷூட்டிங் செல்வதற்காக காரில் புறப்பட்டார். ஆனால் கார் டிராபிக் நெரிசலில் சிக்கியதால் அங்கு இருக்கும் நபரிடம் லிப்ட் கேட்டு பைக்கில் படப்பிடிப்புக்கு சென்றார். அந்த வீடியோ சமீபத்தில் வைரலாக பரவியது. சமூக வலைதளவாசிகள் அவரது எளிமையை பாராட்டியது மட்டும் இல்லாமல் அவருக்கு ஆப்பும் வைத்துவிட்டனர். அதாவது பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் கூட அணியாமல் சென்றதற்காக அவரை இணையதளவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அவரை சமூக வலைதளத்தில் கேள்வி கேட்பது மட்டும் இல்லாமல் மும்பை போலீசை டேக் செய்து இதையெல்லாம் கேட்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள மும்பை போலீஸ் கண்டிப்பாக ஹெல்மெட் அணியாமல் சென்ற குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படும் என்று பதில் அளித்துள்ளனர்.
சிக்கிய அனுஷ்கா ஷர்மா
இதேபோல் தான் சமீபத்தில் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா சமீபத்தில் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற புகைப்படமும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் அவரையும் தற்போது கேள்வி கேட்டு வருகின்றனர். அவசரமாக சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயம். இந்த விதிகளை மீறியதற்காக மும்பை போலீஸ், இருவரிடமும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இன்னும் சிலர் இதெல்லாம் பப்ளிசிட்டிக்காக செய்யும் வேலை என்று விமர்சித்து வருகின்றனர்.















































