தனது வருங்கால கணவர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி.
வளர்ந்து வரும் நடிகை
தெலுங்கில் பிஸியாக இருந்து வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி, சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான “கஸ்டடி” திரைப்படத்தில் நடித்திருந்தார். 19 வயதான கீர்த்தி ஷெட்டி இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்குகிறார். வளர்ந்துவரும் நடிகையாக இருக்கக்கூடிய இவர், பல படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருகிறார். சமீபத்தில் கூட தனக்கு நடிகை திரிஷாவை மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார்.
வருங்கால கணவர்
தற்போது தனது வருங்கால கணவர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் கீர்த்தி ஷெட்டி. ‘கஸ்டடி’ பட விளம்பர நிகழ்வில் பேசிய அவர், “எனது வருங்கால கணவர் அழகாக இருக்க தேவையில்லை. பெரிய செல்வந்தராக இருக்க வேண்டும் என்றில்லை. பாசாங்கு இல்லாமல், நேர்மையான நல்ல மனம் கொண்டவராக இருந்தாலே போதும். எந்த வயதிலும் வளர்ச்சியை நோக்கிய மனப்பான்மையுடன், கொஞ்சம் குண்டாகவும் இருந்தால் மிகவும் பிடிக்கும்” என கூறியுள்ளார்.















































