மோசமான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் ஆவேசமாக வாக்களித்து தீர்ப்பளித்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தெரிவித்துள்ளார்.
முன்னிலை
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் முன்னிலை வகித்தது. ஆளும்கட்சியான பிஜேபி பின்னடைவை சந்தித்தது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி காங்கிரஸ் 134 தொகுதிகளிலும், பிஜேபி 64 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
மக்கள் கொடுத்த அடி
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லுகார்ஜூனா கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில்; “தவறான அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு கொடுத்த அடி இது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் திரண்டு இங்கே வந்து தங்களின் பலத்தை காட்டினர். ஆனால் மக்கள் பாஜகவை தூக்கி எறிந்துவிட்டனர். கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதை கட்சி மேலிட பொறுப்பாளர்கள் பெங்களூருவுக்கு வருகை தந்து தேர்வு செய்வார்கள்” என்று கூறினார்.