வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் தேதி திறக்கப்படுகிறது.

நடை திறப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வைகாசி மாத பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (மே 14) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். மறுநாள் (மே 15) முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

ஆன்லைன் முன்பதிவு

சபரிமலையில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வைகாசி மாத பூஜைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here