தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
நீக்கம்
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கடந்த 2 வாரங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனான மன்னார்குடி மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா, அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
பதவியேற்பு
இதனையடுத்து சென்னை ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளத குறிப்பிடத்தக்கது.