இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது என்று நடிகை மனிஷா கொய்ராலா குற்றம் சாட்டியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் மனிஷா
90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த மனிஷா கொய்ராலா, ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். 1995 ஆம் ஆண்டு பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அவர், முதல் படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதன்பிறகு ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த மனிஷா,ஷங்கரின் இந்தியன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்திலும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
ஆணாதிக்கம் நிறைந்தது
கடைசியாக 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவிற்கு அம்மாவாக நடித்திருந்தார். அதன் பிறகும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் பிஸியாகிவிட்ட மனுஷா கொய்ராலா, சமீபத்தில் இந்திய சினிமாவை விமர்சனம் செய்துள்ளார். அதாவது “இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது, ஆண்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. திறமை வாய்ந்த நபர்களுக்கு நடிப்பதற்கு குறைவான வாய்ப்புகளை கொடுக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டி உள்ளார். முன்னணி நடிகையாக இருந்து வந்த மனிஷா கொய்ராலா, தற்போது சினிமா துறையை பற்றி இப்படி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.