பாலையாவால் மட்டுமே அதெல்லாம் செய்ய முடியும் நான் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கலகலப்புடன் பேசியுள்ளார்.
பிரம்மாண்ட விழா
தெலுங்கில் முன்னணி நடிகராகவும், திரையலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமராவ். இவர் தமிழக முதலமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். இவரது நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட என்.டி.ஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்தார்.
பங்கேற்ற பிரபலங்கள்
இதனைத் தொடர்ந்து என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், என்.டி.ஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஏத்துக்க மாட்டாங்க
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினர். அவர் பேசியிருப்பதாவது, “பாலய்யா ஒரு தட்டு தட்டினால் ஜீப் பறக்கும். அதை நானோ, அமிதாப் பச்சனோ, ஷாருக்கானோ, சல்மான்கானோ செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாலய்யா செய்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் அவரை மக்கள் பாலய்யாவாக மட்டும் பார்க்கவில்லை, என்.டி. ராமாராவ் ஆகவே பார்க்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.