நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கதைக்கு முக்கியத்துவம்
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகாவிற்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் நடிப்பில் வெளியான 36 வயதினிலே, நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது காதல் என்ற மலையாள படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா.
தீவிர உடற்பயிற்சி
கதாநாயகியாக அறிமுகமான ஆரம்ப காலத்தில் பப்லியாக இருந்த ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். தீவிரமாக உடற்பயிற்சி, யோகா செய்து தனது உடலை பேணிக்காத்து வருகிறார் ஜோ. ஜோதிகா சமீபத்தில் வொர்க் அவுட் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தலைகீழாக நின்று கொண்டு ஜோதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், அவரைப் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். 44 வயதிலும் இளமைத் துடிப்புடன் இருந்து வரும் ஜோதிகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.