திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடும் வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 10 முதல் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி கடந்து பதிவாகியது. கடும் வெயில் காரணமாக மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதனிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக சில இடங்களில் இடியுடன் கூட மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்கள் ஹாப்பி
கோடைகாலம் தொடங்கியதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.