அஜித் ஷாலினிக்கு திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆகும் நிலையில் தனது கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஷாலினி.

23 ஆண்டுகள்

நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் அஜித் – ஷாலினி. அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்த இந்த ஜோடி, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆன பிறகும் குறையாத காதலுடன் அஜித் ஷாலினி வாழ்ந்து வருகின்றனர். எங்கே வேர்ல்ட் டூர் சென்றாலும் இவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் டிரெண்டாகி வருவது வழக்கமான ஒன்று.

ரொமான்டிக் போட்டோஸ்

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார் ஷாலினி. சமீபத்தில் இன்ஸ்டாவில் இணைந்த இவர், அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு சூப்பர் அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். அதேபோல் தங்களது திருமண நாளை முன்னிட்டு அஜித்துடன் இணைந்து ஷாலினி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது. இவர்களது திருமண நாளை முன்னிட்டு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here