அவதார்: த வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 4000 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வெற்றியடைந்த 2 பாகங்கள்

பிரபல பட தயாரிப்பாளர் ஜேம்ஸ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி வெளியான அவதார் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது. “அவதார்: த வே ஆஃப் வாட்டர்” இந்த படத்தில் சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டனா, ஸ்டீபன் லாங், கேத் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக வசூல் வேட்டை நடத்தி வரும் “அவதார்: த வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன. திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

வசூல் வேட்டை

தற்போது இப்படத்தின் ஒட்டு மொத வசூல் குறித்து வெளிவந்த தகவல் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. இப்படம் 2.1 பில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதன் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு 541 பில்லியன் டாலர் லாபமாக கிடைத்துள்ளதாம். அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் 4000 கோடிக்கு மேல் லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here