எதிர்நீச்சல் தொடரின் புதிய எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
குணசேகரன் சூழ்ச்சி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. அடுத்தடுத்து பல ட்விஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி உள்ளது. வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் “அப்பத்தா எங்க போச்சுன்னு தெரியல உங்க அண்ணி யாருக்காவது போன் போட்டு கேளுங்க” என விசாலாட்சி சொல்கிறார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக குணசேகரன், “அது எங்க போக போகுது அது என்ன சின்ன குழந்தையா” என அசால்ட்டா தான் பதிலளிக்கிறார். அதன் பிறகு ஜனனி மற்றும் சக்தி ஹாஸ்பிடல்லில் இருக்க, இப்ப நான் சொல்லப் போகிற விஷயத்தை பொறுமையா கேளுங்க என்று டாக்டர் சொல்கிறார். அப்படி சொன்ன உடனே பதட்டமடையும் ஜனனி, அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு என்று பயத்துடன் இருக்கிறார். அப்பத்தாவுக்கு எதிராக குணசேகரன் என்ன சூழ்ச்சி செய்துள்ளார். அப்பத்தாவுக்கு என்ன நேர்ந்தது என்பதெல்லாம் இன்றைய எபிசோடில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.