லண்டனில் சிட்டாடல் வெப் தொடரின் பிரீமியர் ஷோ நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் சிட்டாடல் தொடரின் நாயகி நடிகை பிரியங்கா சோப்ரா, சமந்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஷாகுந்தலம் தோல்வி
ஹாலிவுட்டின் இயக்குநர்களான ரூஸ்ஸோ பிரதர்ஸின் புதிய வெப்தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகிறது. தொடரின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமந்தா கடைசியாக ஷாக்குந்தலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியானது ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றிபெறவில்லை. 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அந்த படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போனது. சரித்திர படம் என்பதால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமந்தாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இந்த படம் ஏமாற்றமாகவே அமைந்தது.
ஹிந்தியில் சமந்தா
முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் மற்றும் ஸ்டான்லி துச்சி, லெஸ்லி மான்வில்லே ஆகியோர் தங்களது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் நடுவே நிர்வாக தயாரிப்பாளர்களான ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ மற்றும் ஷோ ரன்னர், டேவிட் வெயில் ஆகியோருடன் இணைந்து லண்டன் பிரீமியரில் பங்கு பெற்றனர். அதிரடிக் காட்சிகள் நிறைந்த ஸ்பை யூனிவர்சின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளான ராஜ் & டிகே மற்றும் சீட்டடெல் இந்திய வெளியீட்டின் இணை எழுத்தாளர் சீதா ஆர்.மேனன் ஆகியோருடன் சேர்ந்து வருண் தவான், சமந்தா உள்ளிட்ட அனைத்து உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
களைகட்டிய தொடக்கம்
இத்தாலிய வெளியீட்டிலிருந்து முன்னணி எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் மற்றும் ஷோ ரன்னர்களான மாடில்டா டி ஏஞ்சலிஸ் மற்றும், ஜினா கார்டினி லண்டன் பிரீமியரில் பங்கேற்றனர். இந்த பிரீமியர் நிகழ்ச்சியில் பிரைம் வீடியோ இந்தியாவின் கண்ட்ரி டைரக்டர் சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் பிரைம் வீடியோவின் ஹெட் ஆஃப் இந்தியா ஒரிஜினல்ஸ் அபர்ணா புரோஹித் ஆகியோரும் கலந்து கொண்டனர். ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO மற்றும் ஷோரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த , 6-எபிசோட் அடங்கிய தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் இரண்டு எபிசோடுகள் ஏப்ரல் 28 அன்று வெளியாகும் அதைத் தொடர்ந்து மே 26 வரை வாரந்தோறும் ஒரு எபிசோட் வெளியாகும். இந்த உலகளாவிய தொடர் 240 நாடுகள் மற்றும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இதர சர்வதேச மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.