நடிகை சனா கான் அவரது கணவர் இழுத்துச்சென்ற வீடியோவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

கவர்ச்சி நடிகை

சிலம்பாட்டம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் சனா கான். 2005 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஈ’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சிம்புவுடன் இணைந்து சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தார் சனா கான். இந்த ஒரு படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு தனது கவர்ச்சியால் ரணகளப்படுத்தினார். கடந்த 2020 ஆம் ஆண்டு முப்தி அனஸ் சையது எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இழுத்து சென்ற கணவர்

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதற்கு மூட்டை கட்டி விட்டு தனது கணவரின் தொழிலை பார்த்துக் கொள்வதாக கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த இப்தார் விருந்தில் தனது கணவருடன் சனா கானும் கலந்து கொண்டார். அப்போது கர்பமாக இருக்கும் சனாவை அவரது கணவர் தரதரவென இழுத்துச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் இணையதள வாசிகள் அவரது கணவரை சரமாரியாக விமர்சித்து வந்தனர் . கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படியா இழுத்துச் செல்வது? நடக்கக்கூட நேரம் கொடுக்காமல் தரதரவென இழுத்துச் செல்வது சரியா? என்று பலரும் கேள்வி கேட்டுவந்தனர்.

சனா விளக்கம்

இந்த வீடியோவும் கமெண்ட்களும் சனாவின் கவனத்திற்கு சென்றது. இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை சனா கான். அவர் கூறுகையில்,” இப்போது தான் இந்த வீடியோ என் கவனத்திற்கு வந்தது. எங்கள் கார் ஓட்டுனரை உடனடியாக தொடர்புகொள்ள முடியவில்லை. எனக்கு வியர்த்துக் கொட்டியதால் என் கணவர் விரைவாக காருக்கு அழைத்துச் சென்றார். மற்றபடி அதை தவறாக நினைக்க வேண்டாம். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார். இவர் விளக்கம் கொடுத்த பிறகும் இவரது விளக்கத்திற்கும் பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவாக கூட்டிச் செல்வது வேறு, இழுத்துச் செல்வது வேறு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்று தங்களது கருத்துக்களை கமெண்டுகள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here