தனது வளர்ச்சி, வெற்றியைப் பார்த்து பல ஆண்கள் பயப்படுவதாக நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
பிடித்த திருமணம்
மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற பிறகு 2002 ஆம் ஆண்டு தமிழன் படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கினார் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தன்னைவிட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் வாடகை தாய் மூலம் கடந்த ஆண்டு பெண் குழந்தைக்கு தாயானார் பிரியங்கா சோப்ரா.
பொதுநலனில் அக்கறை
பாலிவுட்டில் 60க்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் நிலவி வரும் நெப்பாடிசம் பற்றி வெளிப்படையாக கூறியிருந்தார். சினிமா பின்புலம் உள்ள பல நடிகர்கள் தன்னை சினிமாவிலிருந்து துரத்த முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஹாலிவுட்க்கு சென்ற பிரியங்கா சோப்ரா தற்போது அங்கேயும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிப்பு மட்டும் இல்லாமல், கல்வி, பெண்கள் உரிமை, ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார் பிரியங்கா. இந்நிலையில் தன்னைப் பார்த்து பல ஆண்கள் பயந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆண்கள் பயந்தனர்
இது குறித்து அவர் பேசுகையில்,” பல ஆண்கள் பெண்களின் வெற்றியைக் கண்டு பயம் கொள்கிறார்கள் என்னுடைய வாழ்க்கையில் பல ஆண்களுடைய வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய வளர்ச்சியை பார்த்து நான் என்றும் பயந்ததில்லை, என்னுடைய வளர்ச்சிகளையும், வெற்றிகளையும் கண்டு பல ஆண்கள் பயந்துள்ளனர். ஒரு குடும்பத்தில் பெண்கள் வேலைக்கு செல்வது, பல துறைகளில் சாதனை செய்வது எல்லாம் சில ஆண்களுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். என்னுடைய தந்தை இராணுவத்தில் பணிபுரிந்தவர். என்னுடைய தாயும் வேலை செய்து வந்தவர் தான். என் அப்பாவை விட அம்மா தான் அதிகம் சம்பாதித்தார். ஆனால் இதனால் அவர்களுக்குள் ஒருநாளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது கிடையாது. அதேபோல் தான் அனைவரும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.