தென்னாப்பிரிக்காவில் எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு தற்காலிகமாக இந்தியன் 2 படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் ஷங்கர்.
பல போராட்டங்கள்
1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது. இந்த படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் 2 இயக்கும் பணியை தொடங்கிய ஷங்கருக்கு பல பிரச்சனைகள் வந்தது. பல காரணங்களுக்காக படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தை முடிக்கும் வேலையில் விறுவிறுப்பாக இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். 4 ஆண்டுகளாக இந்த படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சின்கா உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இயக்குநர் ஷங்கர் தனது டீமை வேலை வாங்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அத அடுத்த கட்டமாக நடிகர் கமலஹாசன் சண்டை பயிற்சி குழுவினருடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது.
ஷூட்டிங் நிறைவு
சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு தைவான் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் ஒரு மிகப்பெரிய ரயில் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சியை படமாக்கி உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு தற்காலிகமாக படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் ஷங்கர். இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க போவதாகவும் மே மாதம் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.