ரீல் மற்றும் ரியலில் ரசிகர்களை கவர்ந்த ஆலியா மானசா – சஞ்சீவ் ஜோடியின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
காதல் திருமணம்
சஞ்சீவ், ஆலியா மானசா ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்து, நிஜத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். விஜய் டிவியில் பிஸியாக இருந்து வந்த நடிகை ஆலியா மானசா, குழந்தை பிறப்புக்கு பிறகு சன் டிவிக்கு மாறிவிட்டார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார் ஆலியா.
இன்ஸ்டா ஹேக்
இரு குழந்தைகளுக்கு தாயான ஆலியா மானசா சீரியலில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் ஆலியா மானசா ஹீரோயினாகவும், மற்றொரு தொடரான கயல் தொடரில் ஹீரோவாக சஞ்சீவும் தற்போது நடித்து வருகின்றனர். எப்பொழுதும் சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாகவே இருக்கக்கூடிய நடிகை ஆலியா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் கார்த்திக்கின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இதனால் எந்த ஒரு அப்டேட்டும் செய்ய முடியாமல் ஆலியா திணறி வருகிறார்.