PS-2 ப்ரோமோஷன் விழாவில் நடிகர் கார்த்தி பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
தீவிரமான ப்ரோமோஷன்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் முடித்துள்ள பட குழுவினர், படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றுக்கு கிடைத்த வரவேற்பைவிட பாகம் இரண்டுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இப்படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக இறங்கி இருக்கும் இப்படக்குழுவினர், கடந்த சனிக்கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பொன்னியின் செல்வன் 2 ஆந்தம் பாடலை வெளியிட்டனர்.
சிங்கிள்ஸ் நலத்துறை அமைச்சர்
இதைத் தொடர்ந்து நேற்று கோவையில் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள் அனைவரும் தனது பட அனுபவத்தை பகிர்ந்தனர். அதிலும் நடிகர் கார்த்தி பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது; “நான் மன்னனாக இருந்தால் காதல்துறை அமைச்சர் பதவி பூங்குழலிக்கும், பேரழகு துறை அமைச்சர் பதவியை நந்தினிக்கும், என்னை விட நல்லவனான பொன்னியின் செல்வனுக்கு பெண்கள் நலத்துறையை கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார். அதேபோல் “சிங்கிள்ஸ் நலத்துறை அமைச்சர் பதவியை தானே எடுத்துக்கொள்வேன் என்றும் உருட்டுத் துறை அமைச்சராக நம்பி ஜெயராமுக்கு கொடுப்பதாகவும்” கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
ரொமான்ஸ் இல்லாத கதை
மேலும் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் வசனங்கள் ஆகியவற்றை ரசிகர்களிடம் கூறினார். அதுமட்டும் இல்லாமல் தனது மனைவி குறித்து பேசும்போது “ரொமான்ஸ் இல்லாத கதையே நடிக்க மாட்டீங்களா? என தனது மனைவி கேட்டதாகவும், வந்திய தேவன் எல்லாரையும் பார்த்து ஜொல்லுவிடுகிறான், ஆனால் கண்ணியமானவனாக இருக்கிறான்” என்று தனது மனைவி கூறியதாக அவர் சொன்னவுடன் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக PS 2 ஒரு ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.