கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் மூன்றாம் பாகம் உருவாகிக்கொண்டு இருப்பதை தயாரிப்பு உறுதி செய்துள்ளது.

வேற லெவல் ஹிட்

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதன்தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் கே.ஜி.எஃப் 2 என்ற பெயரில் கடந்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் எந்த படமும் செய்யாத சாதனையை இந்த கேஜிஎப் படங்கள் செய்தது. கே.ஜி.எஃப். 2 படத்தில் யாஷ்ஷுடன் இணைந்து சஞ்சய் தத், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

உருவாகும் கே.ஜி.எஃப். 3

தற்போது அடுத்த கட்டமாக கே.ஜி.எஃப். 3 திரைப்படம் உருவாகி வருகிறது. கே.ஜி.எஃப். 2 வெளியாகி ஓராண்டு முடிவடைந்த நிலையில், இதனை கொண்டாடும் விதமாக ஹொம்பாலே நிறுவனம் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கே.ஜி.எஃப். மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கே.ஜி.எஃப். படம் காவியமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த படத்தின் கதாபாத்திரங்கள், என்றும் ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காது என்ற கேப்ஷனுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை யாஷ் ரசிகர்கள் ஷேர் செய்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர். கண்டிப்பாக இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here