நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியான நைக் நாயிடம் முத்தம் கேட்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது.

பிஸியான கீர்த்தி

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழியிலும் பிஸியாக இருக்கக்கூடியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தீவிரமாக உடற்பயிற்சி செய்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய கீர்த்தி சுரேஷ், பலரின் ட்ரோல்களுக்கும் ஆளானார்.

தசரா வெற்றி

கடந்தாண்டு இவர் நடித்த சாணிகாகிதம் திரைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இவரது நடிப்பில் பல படங்கள் தற்போது படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது. ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, சைரன் போன்ற படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் போன்ற பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் . மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. சமீபத்தில் நானியுடன் இவர் நடித்த தசரா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

முத்தம் வேண்டும்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் முத்தம் கேட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. தசரா படப்பிடிப்பின்போது தனது கேரவனுக்குள் இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது செல்லப்பிராணியான நைக் நாயிடம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த நாயை பிடித்து, உனக்கு நான் எத்தனை கிஸ் கொடுத்திருக்கிறேன். எனக்கு ஒன்னே ஒன்னு கொடுடா என கெஞ்சுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here