மலையாளத் திரையுலகில் தனக்கு வந்த வாய்ப்பை முன்னணி நடிகர்கள் தான் சதி செய்து கெடுத்தார்கள் என்று பிரபல நடிகை ஷகிலா கூறியுள்ளார்.
காமெடி ஷகிலா
மலையாள சினிமா துறையில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. முன்னணி நடிகர்களின் படத்தைவிட ஷகிலாவின் படத்திற்கு வசூல் அள்ளும் அளவிற்கு இவரது புகழ் ஓங்கி இருந்தது. அதனால் டென்ஷனான மலையாள முன்னணி நடிகர்கள், படங்களில் நடிக்க ஷகிலாவுக்கு தடை விதிக்க பிளான் செய்தனர். அதன்பிறகு ஷகிலா சென்னை வந்துவிட்டார். பின்னர் தமிழிலும் சில படங்களில் நடித்து வந்தார் ஷகிலா. தமிழில் இவர் ஜெயம், தூள், வியாபாரி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து ஷகிலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இவர்கள் தான் கரணம்
அந்த பேட்டியில் ஷகிலா கூறியிருப்பதாவது, “நான் மலையாள படங்களில் நடித்து 22 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் என்னை பழைய ஷகிலாவாகவே பார்க்கிறார்கள். மம்முட்டி எனது படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயன்றதாக கேள்விப்பட்டேன். அவரது கோபத்தில் நியாயம் உள்ளது. அவர்கள் ரூ.5 கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் ரூ.10 லட்சத்தில் படம் எடுக்கிறோம். ரூ.5 கோடி படத்தை ரூ.10 லட்சத்தில் எடுத்த படம் காலி செய்தால் கோபம் வரத்தானே செய்யும். எனக்கு நடிக்க அவர்கள் தடை விதிக்க நினைத்ததும், நானே மலையாளத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு வாங்கிய அட்வான்சை திருப்பி கொடுத்துவிட்டேன். நான் நடித்த 23 படங்களுக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் வைத்து தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தினர்” என்று பேசியுள்ளார்.















































