காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெற்றி இயக்குநர்

2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. முதல் படமே குடும்ப பங்கான படமாக அமைந்ததால், ஃபேமிலி ஆடியன்ஸ்சை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு இவர் இயக்கிய ரன், சண்டைக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 2008 ஆம் ஆண்டு சண்டைக்கோழி 2 படத்திற்கு பிறகு பெரிய பிரேக்கில் இருந்த லிங்குசாமி, 2022 ஆம் ஆண்டு தி வாரியார் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். அஞ்சான் படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய அனைத்து படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்ததால், இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் லிங்குசாமி.

பெரிய கடன்

‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை இயக்குவதற்காக பிவிபி கேபிட்டல்ஸ் நிறுவனத்திடம் ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். கார்த்தி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாக இருந்த இந்த திரைப்படம், பல பிரச்சனைகளால் தொடங்காமலேயே இருந்தது. இதனை தொடர்ந்து, அந்த படத்திற்காக பெற்ற கடன் தொகையை திரும்பி செலுத்தக் கோரி பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இதனால் பெற்ற கடன் தொகையை மீண்டும் செலுத்துமாறு லிங்குசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து முதல்கட்டமாக ரூ.35 லட்சத்துக்கான காசோலையை பிவிபி நிறுவனத்திற்கு வழங்கினார் லிங்குசாமி.

பவுன்ஸ் ஆன செக்

அக்கவுண்டில் தேவையான பணம் இல்லாததால் அந்த காசோலை பவுன்ஸ் ஆனது. டென்ஷனான பிவிபி நிறுவனம் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக லிங்குசாமி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த ஆறு மாத சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. லிங்குசாமியின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழ் திரையரங்கில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here