‘DNA’ என்ற மலையாள படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் நடிகை ராய் லட்சுமி.
கவர்ச்சி நடிகை
2005ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு குண்டக்க மண்டக்க, தர்மபுரி, தாம் தூம், வாமணன், நான் அவன் இல்லை 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தும், தமிழில் முன்னணி நடிகையாக வர இன்னும் போராடிக் கொண்டு இருக்கிறார் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக வெறும் கவர்ச்சி நடிகையாகவே இருந்து வந்த நடிகை ராய் லட்சுமி, சமீபத்தில் கூட கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான போலா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார்.
போலீஸ் அதிகாரி
15 ஆண்டுகளாக கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ராய் லட்சுமி, தற்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் தயாராகி வரும் ‘டிஎன்ஏ’ என்கின்ற திரைப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ராய் லட்சுமி. மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் அமைப்பு வேண்டும் என்பதற்காக கடுமையாக முயற்சி செய்து உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். இப்படத்தை டி.எஸ். சுரேஷ் பாபு இயக்குகிறார். கிரைம் த்ரில்லராக உருவாகி வரும் ‘டிஎன்ஏ’ திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இத்தனை ஆண்டுகளாக கவர்ச்சியாக நடித்து எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காததால், தற்போது கவர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே ராய் லட்சுமி நடித்து வருவதாகவும் தகவல் கூறுகின்றனர்.