நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோன் பார்ட்டியில் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

செலக்டிவான படங்கள்

உலக அழகி என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். எத்தனையோ உலக அழகிகள் தேர்வு செய்யப்பட்டாலும், ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்ற உடனே மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார் ஐஸ்வர்யா. அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா, பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்கள் நடித்துள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட செலக்டிவான படங்களில் மட்டுமே தமிழில் நடித்து வருகிறார்.

செம டான்ஸ்

கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்திலும் நடித்து அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராய். இப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோன் குத்தாட்டம் போட்ட பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது. பொதுவாக ஐஸ்வர்யா ராய் பார்ட்டிகளில் பங்கேற்றாலும் அவரது வீடியோக்கள் புகைப்படங்கள் ஏதும் அதிகளவில் வெளிவராது. அதனால் இந்த வீடியோ வந்த உடன் ஜூம் செய்து பார்த்த ரசிகர்கள் செம ஷாக்கில் உள்ளனர். அட நம்ம ஐஸ்வர்யா ராயா இது? என்று கேள்வி கேட்டு முடிக்கும் முன்னே தீபிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார் ஐஸ்வர்யா ராய். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது. ஐஸ்வர்யா மற்றும் தீபிகாவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here