தனது முன்னாள் கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

ரிலீசுக்கு ரெடி

தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் நடிகை சமந்தா. தற்போது ஷாகுந்தலம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனல் முழு வீச்சாக இறங்கியுள்ள பட குழுவினர் அடிக்கடி அப்டேட்டுகளை வழங்கி வருகின்றனர். வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் ஷாகுந்தலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. பலமுறை இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், கடைசியாக ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்துள்ளனர். இதனால் ப்ரொமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார் சமந்தா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே தற்போது சமந்தா நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

2017ம் ஆண்டு நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் தனது முன்னாள் கணவரான நாக சைதன்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது சமந்தா மற்றும் நாக சைதன்யா இணைந்து 2019 ஆம் ஆண்டு நடித்திருந்த திரைப்படம் ‘மஜ்லி’. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் கடந்ததை தொடர்ந்து, இதனை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவ்ர் ஷேர் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here