நடிகை நயன்தாராவின் 75வது படத்தில் பிக் பாஸ் பிரபலம் சுரேஷ் சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கியமான படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து கொண்டிருந்த நயன்தாராவுக்கு “ஜவான்” படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. அட்லி இயக்கும் இந்த படத்திற்கு மிகுந்த ஆவல் நிலவி வருகிறது. 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் இவரது கெரியருக்கு ராஜா ராணி படம் மிகவும் முக்கியமாக அமைந்தது. இந்த படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ராஜா ராணி படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாரா – ஜெய் ஜோடி இணைகின்றது. ராஜா ராணி படத்தில் ஜெய் மற்றும் நயன்தாராவின் காம்போ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படத்திலும் இவர்களது கூட்டணி ரசிக்கும் படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

பிக் பாஸ் பிரபலம்

இதைத்தொடர்ந்து நயன்தாராவுடன் சென்டிமென்ட் ஆன நடிகர் ஒருவரும் இப்படத்தில் இணைந்துள்ள தகவல் அதிகார பூர்வமாக வெளியானது. ‘ராஜா ராணி’ மற்றும் ‘கனெக்ட்’ ஆகிய படங்களில் நயன்தாராவுக்கு தந்தையாக நடித்த நடிகர் சத்யராஜ் இப்படத்தில் இணைந்துள்ளார். இவரை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். நயன்தாரா 75 படத்தில் நடிக்க உள்ள பிரபலங்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here