கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து அபிராமி பேசியது தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி டுவீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அக்கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பொய் புகார்

இந்நிலையில், சமீபத்தில் கலாஷேத்ரா விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி, கலாஷேத்ரா கல்லூரி குறித்து அவதூறு பரப்பக்கூடிய வேலை தான் தற்போது நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் ஹரிபத்மன் மீது பொய்யாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அபிராமி ஒரு புகாரையும் அளித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஹரிபத்மன் சார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வரைக்கும் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. இந்த பிரச்சனையில் நிர்மலா, நந்தினி ஆகிய 2 ஆசிரியர்கள் மாணவிகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகின்றனர்” எனப் பேசியிருந்தார்.

டைம் வேஸ்ட்

அபிராமியின் இந்த பேச்சு குறித்து நடிகை சனம் ஷெட்டி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அதே கலாஷேத்ராவில் ஆசிரியர்களால் கொடுமைப்படுத்துதல், கையாளுதல் போன்றவற்றுக்கு ஆளானதை அபிராமி ஏற்றுக்கொண்டுள்ளார். இதை அப்போவே சொல்லிருக்கலாமே. நேரம் தான் வீணானது. இவங்களே இப்போ புது புகார் குடுக்கிறாங்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here