சென்னை வரும் பிரதம்ர் நரேந்திர மோடியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமானது

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அரசியல் மாயையில் சிக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். அவர் மேலும் பேசுகையில்; “அதிமுக அரசியல் மாயையில் சிக்கியுள்ளது. இந்த மாயை மக்கள் மன்றத்துக்கு கொண்டு சென்றால் விலகும். தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே இருக்கிறது. இன்று பொதுச் செயலாளரை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அவர்களே அறிவித்துக் கொண்டார்கள். இது கழகத்தின் சட்ட விதிக்கு புறம்பானது. இந்த உலகம் உள்ளவரை அதிமுக இருக்கும். அதன் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று ஏற்கனவே நடந்த பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவில் கூட்டப்படும் செயற்குழு கூட்டம் சட்ட விரோதமானது.

மக்கள் மன்றம் செல்வோம்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் சாமார்த்தியமாக தீர்ப்பு வழங்கக் கூடியவர்கள். எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்ல வருகிற 24ம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடக்கிறது. அதன்பிறகு மாவட்டம் தோறும் ஒருங்கிணைப்பாளர் சென்று மக்களை சந்திப்பார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here