அல்போன்ஸ் புத்திரன் இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஹிட் இயக்குநர்
நேரம், பிரேமம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். பிரேமம் படத்தின் வெற்றி இவரை ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த படத்தின் மூலம் தான் நடிகை சாய் பல்லவியும் பிரபலமானார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கோல்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கடந்த மாதம் அல்போன்ஸ் புத்திரன் அடுத்து தமிழ் படம் ஒன்று இயக்கப் போவதாக சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது இந்த படத்திற்கான பணிகளை துவங்கியுள்ள அவர், சமீபத்தில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக ஆடிஷனில் பல நடிகர்கள், நடிகைகள் நடிப்பில் ஆர்வமுள்ள புதுமுக இளைஞர்கள் என்று நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டிருந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
யார் ஜோடி?
அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், விஜய் சேதுபதி ஹீரோவாக இருந்தால் கதாநாயகியாக யார் நடிப்பார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் இப்படம் லவ் சப்ஜெக்ட் ஆக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இப்படம் குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் காதல் படங்களில் பின்னி பெடலெடுக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது வரை ரசிகர்கள் விவரம் சேகரிக்க தொடங்கிவிட்டனர்.















































