நடிகை பூர்ணாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

தசராவில் பூர்ணா

இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2021ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக வெளியான தசரா படத்திலும் வர் நடித்துள்ளார்.

தாயான பூர்ணா

துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை பூர்ணா, சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் தகவலை சமூகவலைத்தளத்தின் மூலம் வெளிப்படுத்தினார். சமீபத்தில் பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்டி வளைகாப்பும் நடந்தது. இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலையும் தனது இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்து உள்ளார். தாயாகி இருக்கும் பூர்ணாவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here