நான் அணியும் உடையை வைத்து பலர் தன்னை ஏளனமாக பேசுவதாக நடிகை ஹனிரோஸ் வேதனையுடன் கூறியுள்ளார்.

தெலுங்கில் பிஸி

பாய் ஃப்ரெண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ். அதன்பிறகு முதல் கனவே, சிங்கம்புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அதிகளவில் மலையாளத்தில் நடித்து வரும் நடிகை ஹனிரோஸ், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் சில படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் பூக்காலம் என்ற மலையாள திரைப்படம் வெளிவர உள்ளது.

கிண்டல், கேலி

இந்நிலையில் சமூக வலைதளத்தில் தன்னை விமர்சிப்பவர்கள் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார் நடிகை ஹனிரோஸ். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; “நான் சினிமாவில் என்ட்ரியான ஆரம்ப காலத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருந்தேன். ஆனால் அதன்பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் என் உடல் எடை கூடியது. இதனால் என்னை அனைவரும் கேலி செய்ய தொடங்கினர். குண்டாக இருப்பதாகவும், இனிமேல் சினிமா வாய்ப்புகள் கிடைக்காது என்றும், அப்படியே கிடைத்தாலும் அம்மா, அக்கா ரோல்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் என்னை இழிவாக பேசினார்கள்.

வேதனையாக இருக்கு

ஆனால் அதன்பிறகு டயட், உடற்பயிற்சி மூலம் எனது உடல் எடையை குறைத்து, மிகவும் ஸ்லிம்மாக மாறினேன். தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறேன். இயக்குநர்கள் கொடுக்கும் உடையை தான் நாங்கள் சினிமாவில் அணிகிறோம். வெளியிடங்களுக்கு சொந்த வேலையாக செல்லும்போது எனக்கு பிடித்த உடைகளை நான் அணிகிறேன். ஆனால் நான் அணியும் உடையை வைத்து என்னை தவறாக விமர்சிக்கின்றனர். இதுவரை நான் ஆபாச உடையணிந்து எங்கும் சென்றது கிடையாது. எனக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இல்லை என்று சமூக வலைதளத்தில் என்னை ஏளனமாக பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவது எனக்கு வேதனையாக இருக்கிறது” என்று ஹனிரோஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here