ராகுல்காந்தி மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ராகுல்காந்தியின் எம்.பி., பதவி பரிக்கப்பட்டது. இதனிடையே தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார். இதற்காக அவர் குஜராத் மாநிலத்துக்கு செல்கிறார். ராகுல் காந்தி சூரத் வந்து சேருகிறபோது, அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள் இருப்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடகம்

இந்த நிலையில், ராகுல்காந்தி மேல்முறையீடு குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது; “மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் செல்கிறார். ராகுல்காந்தி மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம். மேல்முறையீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் செல்ல வேண்டியம் அவசியம் இல்லை. பொதுவாக, எந்தவொரு குற்றவாளியும் தனிப்பட்ட முறையில் செல்வதில்லை. ராகுல் காந்தி செய்யும் மேல்முறையீடு நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகும்” என்று கூறியுள்ளார்.

முக்கிய ஆலோசனை

இதனிடையே, மேல்முறையீடு செய்ய சூரத் செல்லும் தனது மகனை சோனியா காந்தி நேரில் சந்தித்தார். அப்போது எம்.பி., பதவி பறிப்பு, சிறை தண்டனை குறித்து இருவரும் கலந்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here