தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசுடன் ரசிகை ராஷ்மிகா காதலில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஸ்லிம் பியூட்டி
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் பக்கம் நடிக்க மாட்டாரா என்று கேட்ட ரசிகர்களை தனது ஸ்லிம் மற்றும் ஸ்டைலால் ஏங்க வைத்தார். சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் ராஷ்மிகா. சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து அசத்தினார் ராஷ்மிகா. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.
காதல் மட்டும் தானா?
நடிகை ராஷ்மிகா மந்தனா பற்றி அடிக்கடி பல காதல் கிசுகிசுக்கள் வெளி வருகின்றன. ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த சமயத்தில் அவருடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு இளம் கிரிக்கெட் வீரரான சுப்மன் கீலை காதலிப்பதாக தகவல் வெளிவந்தது. தற்போது மும்பை விமான நிலையத்தில் தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும், ராஷ்மிகாவும் ஜோடியாக வந்தார்கள். இதைப் பார்த்த மீடியாக்களும், ரசிகர்களும் இவருடன் காதலில் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், நடிகைகள் யாருடனாவது வெளியே வந்தாலே காதல் விவகாரமாக தான் இருக்குமா? அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது, யாரும் அதில் தலையிட வேண்டாம் என்று கருத்து கூறி வருகின்றனர். தற்போது நடிகை ராஷ்மிகா குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.