சீரியஸ் கதைகளில் நடித்து வந்த மலையாள நடிகர் சுராஜ் மீண்டும் காமெடி ரோலில் நடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சீரியசான சுராஜ்
2001 ஆம் ஆண்டு லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் என்ற படத்தின் மூலம் தனது கெரியரை துவங்கிய நடிகர் சுராஜ், மலையாளத்தில் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “தி கிரேட் இந்தியன் கிச்சன்”, “ஜன கன மன”, “முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்” உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சீரியஸான கதைகளாகவே அமைந்துவிட்டது. சீரியஸாகவே சுராஜை பார்த்துவிட்ட ரசிகர்கள் எப்பொழுது இவர் காமெடி ஜானலில் குடும்பப்பாங்கான கதைகளில் நடிப்பார் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது ” ” படத்தின் டீசர்.
ஜாலி மோட்
ஜாலியான காமெடி படமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சுராஜ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுராஜுடன் இணைந்து பாபு ஆண்டனி, ராஜேஷ் மாதவன், சுதி கொப்பா, பாமா அருண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஏப்ரல்15 விஷு திருநாள் அன்று “மதனோல்சவம்” திரைப்படம் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.