ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து தமிழக சட்டப்பேரவையில் பங்கேற்றனர்.
தகுதி நீக்கம்
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயர் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீப்பளித்தது. இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது. இதநை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்ப்பு
இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு இன்று வருகை தந்தனர். அப்போது ராகுலுக்கு ஆதரவாக இருப்போம் என்ற வாசகத்துடன் கூடிய பாதகைகளுடன் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்.எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்தனர்.