பிரபல மலையாள நடிகரான இன்னசென்ட் உடல்நிலை குறைவால் இன்று காலமானார்.

750 படங்கள்

பிரபல நடிகர் இன்னசென்ட் 1972 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான லேசா லேசா படத்தில் இவர் நடித்திருந்தார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய இவர், சுமார் 750 படங்களுக்கு மேல் காமெடியனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தீவிர சிகிச்சை

நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் வெற்றி பெற்றவர் இன்னசென்ட். 2012 ஆம் ஆண்டு தொண்டைப்புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று, அதன்பிறகு குணமடைந்த இவர், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் உள்ள லேக்ஷோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு மீண்டும் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்னசென்ட்க்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மரணம்

இந்நிலையில் நேற்று நாள்ளிரவு அவர் உயிர் இழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. லேக்ஷோர் மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், “இன்னொசென்ட் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் எங்கள் கவனிப்பிலும், சிகிச்சையிலும் இருந்தார். கோவிட் தொடர்பான சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பல உறுப்பு செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவை அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னசென்ட்டின் மறைவு செய்தி கேட்ட ரசிகர்களும், திரைபிரபலங்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here