கொழுகொழுவென இருந்த நடிகை லாஸ்லியா தற்போது துரும்பாய் மெலிந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
படத்துக்காக காத்திருக்கும் லாஸ்லியா
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தவர் லாஸ்லியா. அதன்பிறகு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் நெருக்கமாக பழகி இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இருவரும் பிரிந்து அவரவர் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர். ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் லாஸ்லியா. இந்த படத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமானார். அவருடன் இணைந்து அர்ஜுன் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
அடையாளம் தெரியாமல் போனது
ஆரம்ப காலத்தில் கொழுகொழுவென இருந்த நடிகை லாஸ்லியா, தற்போது துரும்பாய் இளைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார் . சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒல்லியான தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள லாஸ்லியாவை ரசிகர்கள் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். ஒல்லியாக இருந்தால் மட்டும்தான் ஹீரோயின் சான்ஸ் கிடைக்குமா? ஏன் இந்த நடிகைகள் இவ்வளவு மெலிந்து போகிறார்கள்? உடற்பயிற்சி முக்கியம் தான். ஆனால் அதிக அளவில் உடற்பயிற்சி செய்து தனது அழகை இழந்து விடுகிறார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை லாஸ்லியா நடித்த எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிரபலமாகவில்லை என்பதால் தனது நடிப்பையும் தன்னையும் நிரூபிக்க வேண்டும் என்ற சூழலில் உள்ள லாஸ்லியா உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக மாறியதுடன், பட வாய்ப்புக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார். இதேபோல் தான் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் அதிக அளவில் உடல் மெலிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.















































