ஆஸ்கர் விருது வென்ற “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தில் பொம்மன் – பெள்ளி தம்பதியர் அந்த விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
படத்தை காண ஆர்வம்
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரானது ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம். முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியினர், தாயை பிரிந்துவரும் குட்டி யானைகளைளை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதே அந்த ஆவணப்படத்தின் கதை. பொம்மன், பெள்ளி தம்பதியரே அதில் நடித்த்திருந்தனர். கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கிய “தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம், ஆஸ்கர் விருதை வென்றது. யானை பராமரிப்பாளர்களான பொம்மன் – பெள்ளி தம்பதி ஆஸ்கர் விருதுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை Netflix நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த விருதுக்கு இந்த இருவர்களும் தகுதியானவர்கள் என்று பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் ஆஸ்கர் மேடையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நெட்டிசன் ஒருவர் பதிவு செய்துள்ளார். 
பெருமை படுத்திய முதலமைச்சர்
பொம்மன் – பெள்ளி தம்பதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் அழைத்தும் பாராட்டியதுடன், தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையும் வழங்கினார். மேலும் இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குநர் கார்த்திகி கொன்சார்வ்ஸை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலை வழங்கியும், சால்வை அணிவித்தும் நினைவு பரிசை வழங்கி பெருமைப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். மேலும் தான் பெற்ற ஆஸ்கர் விருதை முதலமைச்சர் இடம் காண்பித்து வாழ்த்துகளையும் பெற்றார் இயக்குநர். ஆஸ்கர் விருதுடன் இருக்கும் பொம்மன் – பெள்ளி தம்பதியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.















































