தசரா பட குழுவினர் 130 பேருக்கு தலா 10 கிராம் தங்கம் பரிசாக வழங்கியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஸ்லிம்மான கீர்த்தி சுரேஷ்
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழியிலும் பிஸியாக இருக்கக்கூடியவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் சூப்பர்ஸ்டார் உடன் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். தீவிரமாக உடற்பயிற்சி செய்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ் பலரின் ட்ரோல்களுக்கும் ஆளானார்.
அடுத்தடுத்து படங்கள்
கடந்தாண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிகாகிதம் திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் மற்றும் நடிகருமான செல்வராகனுடன் இவர் இணைந்து நடித்த வித்தியாசமான கதாபாத்திரம் அனைவரையும் வியக்க வைத்தது. இவரது நடிப்பில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, சைரன் போன்ற படங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கிலும் அதிகம் கவனம் செலுத்திவரும் கீர்த்தி, நானிக்கு ஜோடியாக தசரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
தங்கம் பரிசு
தசரா படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக பாடகி தீ மற்றும் அனிருத் பாடிய “மைனர் வேட்டி கட்டி” என்ற பாடல் தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படம் தனக்கு நெருக்கமான படமாக அமைந்துள்ளதாக கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி, தனது கதாபாத்திரம் மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருப்பதனால் தன்னுடன் பணியாற்றிய 130 பணியாளர்களுக்கு தலா 10 கிராம் தங்கம் பரிசளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள பரிசுப் பொருளின் இன்றைய விலை ரூ.75 லட்சம் ஆகும். இதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் “மகாநடி” படத்தில் நடித்த போதும் பட குழுவினருக்கு தங்கம் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.