பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆபாச வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. 29 வயதாகும் இவர் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனிடையே, பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பாலியல் தொல்லை கொடுத்தாதாக இளம்பெண் ஒருவர் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதனை அறிந்த பெனடிக் ஆன்டோ தலைமறைவானார். அவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், நாகர்கோவிலில் அருகே பதுங்கி இருந்த பெனடிக்ட் ஆன்டோ தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவின் லேப்டாப்பை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 80-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் பெண்களுடனான புகைப்படங்களும் இருப்பது தெரியவந்தது.

காதலித்தோம், பிரிந்தோம்

கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஆன்டோவிடம் போலீசார் ட்ஹீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆவர் கூறியதாவது; தன்னுடன் ஆபாசமாக இருந்ததாக புகைப்படங்களில் வெளியான இளம்பெண்ணை நான் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தேன். இருவரும் நெருக்கமாக பழகினோம். அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்தோம். திருமணம் செய்துகொள்ளவும் முடிவு எடுத்தோம். ஆனால், என்னுடைய பாதிரியார் பணி அதற்கு தடையாக இருந்தது. இந்த பணியை துறந்து அவளை திருமனம் செய்துகொள்ள முடிவு எடுத்தேன். ஆனால், சமூகத்தில் கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால் அந்த முடிவை கைவிட்டேன். இருவரும் ஒன்றாக பேசி பிரிந்து சென்றோம். கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்தது… அவளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள இருவரும் பேசிய வீடியோ கால் சேட்டிங், ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றை எனது லேப்டாப்பில் பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டேன். இதற்கு இடையே மற்றொரு பெண்ணோடு பழகிய சம்பவம் தொடர்பான விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவருக்கும் எனக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் என்னை பழி வாங்க வேண்டும் என்பதற்காக அந்த மாணவன் தன்னிடமிருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டார். இதுதான் அனைத்து பிரச்சினைக்கும் காரணம்” என பாதிரியார் ஆன்டோ கூறியுள்ளார். வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட போலீசார் இதற்கு பின்னால் யார் யார் உள்ளனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here