கேஎஃப்சி உணவகத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.
துரத்தும் பிரச்சனைகள்
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் 90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். தனது சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. பிக் பாஸ்க்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது பவர் ஸ்டாருடன் இணைந்து படத்தில் நடித்து வரும் வனிதா, பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் குறித்து கருத்துக்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார்.
சிக்கனா? காக்காவா?
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய வனிதா கேஎஃப்சி உணவகத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாக புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் உள்ள கேஎஃப்சிக்கு சாப்பிட சென்ற வனிதா விஜயகுமார் தான் மோசமான அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட சிக்கன் பீஸ் மிகவும் சின்னதாக இருந்ததாகவும், கஸ்டமர் சர்வீஸ் மிகவும் மோசமாக இருந்ததாகவும் கூறியுள்ள வனிதா, இதுபோல் சிறிய சிக்கனை பார்த்ததுண்டா இது சிக்கனா? அல்லது காக்காவா? என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இவரது பதிவை பார்த்த கேஎஃப்சி நிறுவனமும் தங்களது வருத்தத்தை தெரிவித்து பதிவிட்டுள்ளது.