நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நடிக்கப் போவதாக வெளிவந்த தகவலுக்கு ஆர்.கே. செல்வமணி விளக்கம் கொடுத்துள்ளார்.

முன்னணி நடிகை

செம்பருத்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரோஜா, சூரியன், உழைப்பாளி, வீரா, ராசையா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ரோஜா, அரசியலிலும் தற்போது ஜெயித்து வருகிறார். ஆந்திர மந்திரியாக இருந்து வரும் ரோஜா கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்தவர். அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்திலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றார்.

திருமணம்

2002 ஆம் ஆண்டு ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்துகொண்ட ரோஜாவிற்கு, அன்ஷு மாலிகா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். நடிகை ரோஜாவை போல அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் கூடிய விரைவில் சினிமாவில் நடிக்கப்போவதாக கிசுகிசுக்கள் வெளிவந்தது. இதுகுறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணியிடம் கேட்டபோது அவர் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

படிப்பு தான் முக்கியம்

ஆர்.கே. செல்வமணி கூறுகையில்; “எனது மகள் அன்ஷுமாலிகாவுக்கு படிப்பில் ஆர்வம் உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். கல்லூரியில் டாப் ரேங்க் மாணவியாக பெயர் எடுத்து இருக்கிறார். இதற்காக பல்கலைக்கழகம் பாராட்டி அவரை கவுரவப்படுத்தி உள்ளது. எனது மகள் சினிமாவில் நடிப்பாரா என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவருக்கு நடிப்பில் இதுவரை ஆர்வமில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தை நானும், ரோஜாவும் ஒரு பெற்றோராக வழங்கி வழி நடத்துகிறோம். படிப்பை முடித்த பிறகு எனது மகள் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here