தனது டயட்டீசியனுக்கு மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் கொடுத்து தனது உடலை கட்டுக்கோப்பாக பாதுகாக்கிறார் நடிகை டாப்சி.

ஆடுகளம் நாயகி

தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான நடிகை டாப்சி, ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஸுடன் இணைந்து நடித்த ஆடுகளம் திரைப்படம், அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. அதைத்தொடர்ந்து தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்த டாப்சி, ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தார். தற்போது, ஜன கன மன, ஏலியன் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.

உடற்பயிற்சியில் ஆர்வம்

உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகை டாப்சி, தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டு வருவார். இவரது கட்டுக்கோப்பான உடலின் ரகசியத்தை தற்போது கூறியுள்ளார். அதாவது தனது உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்காக டயட்டீசியன் (dietitian) ஒருவருக்கு மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் கொடுப்பதாக டாப்சி கூறியுள்ளார். இந்த விஷயம் தனது தந்தைக்கு தெரியாது என்றும் தெரிந்தால் இவ்வளவு பணம் செலவு செய்கிறாயே என்று அவர் கேட்பார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் டாப்சியை வறுத்தெடுத்து வருகின்றனர். சத்தான உணவு, தேவையான அளவு உடற்பயிற்சி போதுமானது. இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று நெட்டிசன்கள் கருத்துக்கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here