நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம ஷாக்கில் உள்ளனர் .
துணை நடிகர்
ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரை பயணத்தை துவங்கிய ரோபோ சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதைதொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர் காமெடியனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி, வேலைக்காரன், விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, தி லெஜண்ட், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகள் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
உடல் மெலிந்த ரோபோ சங்கர்
சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதி இன்றி வளர்த்த இரண்டு அலெக்சாண்டியன் பச்சை கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அனுமதி இன்றி வீட்டில் வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததற்காக ரூ 2.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்னதாகவே தற்போது ரோபோ சங்கரின் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திரஜா சங்கர் அடிக்கடி தனது தந்தையுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை ஷேர் செய்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரோபோ சங்கர் மிகவும் உடல் மெலிந்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் படங்களில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்தாரா? அல்லது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.















































