தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் லிஸ்டில் மறக்கமுடியாத ஒருவர் லோகேஷ் கனகராஜ்.இவரது படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று நினைக்கும் அளவிற்கு இவரது வெற்றி அபாரமானது. வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு இன்று 37 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
சினிமா ஆர்வம்
வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் இயக்குநராக அவதாரம் எடுத்தார். மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் வைத்துக்கொண்டார். இவர் இயக்கிய கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன் நடிகர் கார்த்திக்கும் திருப்புமுனை படமாக அமைந்தது. ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான கதை அம்சத்துடன் இயக்கும் லோகேஷ் கனகராஜ், கார்த்தி, விஜய், கமலஹாசன் என முன்னணி நடிகர்களை இயக்கி கோலிவுட்டில் புதிய பரிமாணத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
குவியும் வாழ்த்துக்கள்
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து இயக்கி வரும் லியோ படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ் எஸ் லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.லியோ படத்தில் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். கண்டிப்பாக இந்த படமும் வேற லெவல் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று 37 வது பிறந்த நாளை கொண்டாடும் வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூகவலைத்தளத்தில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.