அதிரடி ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டுள்ள கப்ஸாஅ படத்தின் டுரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 
மிரட்டும் படங்கள்
கன்னட திரை உலகில் சமீபகாலமாக அதிரடி திரைப்படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. வேறு எந்த மொழிகளிலும் இல்லாத அளவிற்கு அத்திரைப்படங்கள் ரசிகர்களை அசர வைத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கேஜிஎப் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய ஹிட்டானது.
ஆக்சன் காட்சி
2018 ஆம் ஆண்டு கேஜிஎப் சாப்டர் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அதன் அடுத்த பாகமான கேஜிஎப் சாப்டர் 2 கடந்த ஆண்டு வெளியானது. இதுவும் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளிவந்தது. அதே பாணியில் தற்போது கப்ஸா திரைப்படமும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.சந்துரு இயக்கத்தில் உபேந்திரா, சிவராஜ்குமார், கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம், அதிரடி ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. கப்ஸா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதிரடி காட்சிகளுடன் வெளியான இந்த டிரெய்லரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.















































