நடிகர் சித்தார்த்தும், அதிதி ராவும் காதலித்து வருவதாக இணையத்தில் பரவி வரும் வதந்திக்கு அதிதி ராவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

காதல் ஜோடி

நடிகை அதிதி ராவ், 2009 ம் ஆண்டு நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்தார். பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சித்தார்த், ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4 போன்ற பல படங்களில் நடித்தார். காவியத் தலைவன், எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் நடித்து வரும் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவை காதலிப்பதாக தகவல்கள் கசிந்தது. அதேபோல் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் வேகமாக பரவி வர, இந்த காதல் விவகாரம் உண்மைதான் என்று ரசிகர்களிடையே பேச்சுக்கள் நிலவ தொடங்கியது. எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தநர்.

கடுப்பான அதிதி

சமீபத்தில் மிக பிரபலமான “எனிமி” படத்தின் “டும் டும்” பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டிருந்த சித்தார்த் மற்றும் அதிதியின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், இவர்கள் பேச்சு பொருளாகவும் மாறினார்கள். அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்த நடிகை அதிதி, தற்போது காதல் தகவல்களையும், செய்திகளையும் கேட்டு கடுப்பாகி உள்ளார். சமீபத்தில் இதுகுறித்து நடிகை அதிதி ராவ் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “மக்கள் அப்படித்தான் பேசுவார்கள். அதை தடுக்க முடியாது. எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையில்லாதது. எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன். நான் விரும்பும் இயக்குநர்களுடன் பணிபுரியும் வரை, மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு பார்க்கும் வரை மகிழ்ச்சியாக இருப்பேன்” என அதிதி ராவ் கூறியுள்ளார். அதிதி ராவின் முன்னாள் கணவருக்கும், பாலிவுட் நடிகை மீனா குப்தாவின் மகளுக்கும் சமீபத்தில் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here