ஆன்லைன் மோசடி கும்பலிடம் நடிகை சுவேதா மேனன் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் மோசடி
மும்பையில் ஒரு தனியார் வங்கியை சேர்ந்த 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, ஒரு மோசடி கும்பல் கேஒய்சி, பான் விபரங்கள் அப்டேட் குறித்து ஒரு லிங்க் ஒன்றை மெசேஜாக அனுப்பியுள்ளது. அந்த லிங்க்-ஐ கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்தும் சில நிமிடங்களில் பணம் திருடப்பட்டுள்ளது. வங்கியில் கேஒய்சி, பான் விபரங்களை அப்டேட் செய்வது மிகவும் முக்கியம் என்பதால், இந்த மோசடி கும்பல் வலையில் 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் விழுந்துள்ளனர்.
பணம் அபேஸ்
பாதிக்கப்பட்ட 40 வாடிக்கையாளர்களில் டிவி நடிகை சுவேதா மேனனும் ஒருவர். இவருக்கு வந்தை லிங்கை கிளிக் செய்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து அந்த மோசடி கும்பல் ரூ. 57,000 பணத்தை திருடியுள்ளது. இதுதொடர்பாக சுவேதா மேனன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், இந்த போலி மெசேஜ்-ல் குறிப்பிட்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தகவல்களை பதிவு செய்த உடனே, வங்கி தரப்பில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இந்த அழைப்பில் பேசியவர் OTPயை பதிவிட சொன்னதால் பதிவிட்ட அடுத்த சில நிமிடத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 57,636 ரூபாய் டெபிட் செய்யப்பட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.