வாத்தி பட புகழ் நடிகை சம்யுக்தா நடித்த படம் தோல்வியானதால் சம்பளம் வாங்க மறுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஹிட்டான வாத்தி
பாப்கான் என்ற மலையாள படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமான நடிகை சம்யுக்தா, களரி, ஜூலை காற்றில் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் தனுஷுடன் இவர் நடித்த வாதி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் வாத்தி. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும், லலித் குமாரின் சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சம்யுக்தா மேனன், சமுத்திரகனி ஆடுகளம் நரேன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கருத்துள்ள படம்
ஆசிரியராக நடித்திருந்த தனுஷின் நடிப்பு நன்றாக பேசப்பட்டது. சுமார் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட வாத்தி திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில், ஆந்திராவில் 25 கோடி ரூபாய் வரை வசூலித்தது. தமிழில் 35 கோடிகள் வரை வசூலித்து மொத்தம் ரூ.60 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. கல்வி சம்பந்தப்பட்ட படம் என்றாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த படத்திற்கு பல அரசியல் தலைவர்கள் பாராட்டிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சம்பளம் வேண்டாம்
இந்நிலையில், நடிகை சம்யுக்தா நடிப்பில் வெளியான திரைப்படம் பிளாப் ஆனதும் தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்க மறுத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மலையாள தயாரிப்பாளரான சாண்ட்ரா தாமஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘எடக்காடு பட்டாலியன்’. இப்படத்தில் நடிகை சம்யுக்தா நாயகியாக நடித்திருந்தார். இப்படத்திற்காக முதலில் 65 சதவீதம் சம்பளத்தை வாங்கிவிட்ட சம்யுக்தா, மீதமுள்ள சம்பளத்தை ரிலீசுக்கு பின் வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இப்படம் ரிலீசாகி தோல்வி அடைந்ததை அடுத்து, தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ், சம்யுக்தாவிற்கு மீதமுள்ள சம்பளத்தை கொடுக்க சென்றுள்ளார். அப்போது படம் தோல்வி அடைந்ததால் அந்த தொகையை சம்யுக்தா வாங்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.