கேரளாவிற்கு டூர் சென்றுள்ள நடிகை ஆயிஷா தன் காதலருடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
தொடரில் ஆயிஷா
சன் டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற தொடர் மூலம் சீரியல்களில் நடிக்க துவங்கிய ஆயிஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் தொடரிலும் நடித்திருந்தார். அதன்பிறகு சத்யா தொடரின் மூலம் பிரபலமானார் நடிகை ஆயிஷா. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 6 இல் பங்கேற்று நல்ல வரவேற்பையும் பெற்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரின் முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.
கேரளா டூர்
சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ஆயிஷா தன் காதலருடன் புகைப்படங்கள் வைரலாக பரவியது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதே, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் ஆயிஷா கூறியிருந்தார். தற்போது கேரளா டூர் சென்று இருக்கும் இந்த ஜோடி, புகைப்படங்களையும், விடீயோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதிலும் காதலருடன் எடுக்கப்பட்ட ரொமான்டிக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் நடிகை ஆயிஷா. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.















































